Published : 20 Jul 2018 09:46 AM
Last Updated : 20 Jul 2018 09:46 AM

வதந்தி பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் திட்டம்

வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்தி பரவுவதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல நிறுவனங்களுடன் இணைந்து வாட்ஸ்அப் செயல்பட இருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

சமூக ஆய்வு மையம் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் வாட்ஸ்அப் இணைந்து செயல்பட்டு வருகிறது.

போலி செய்திகளை எப்படி கண்டுபிடிப்பது, அதில் இருந்து எப்படி கவனமாக இருப்பது என்பது குறித்து மக்களுக்கு விளக்க பல நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என வாட்ஸ்அப் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் 20 கோடிக்கும் மேலானவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் மூலமாக போலி செய்திகளும், வதந்திகளும் பரவுவதாகவும் இதனை தடுக்க நிறுவனம் முயற்சி எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு கூறியிருந்த குற்றச்சாட்டுகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், இன்னும் சில நாட்களில் மீண்டும் வாட்ஸ்அப் நிறுவனத்தை மீண்டும் தொடர்புகொள்வோம் என கூறினார்.

அதே சமயத்தில் சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனமும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர நாளிதழ்களில் இது தொடர்பான விளம்பரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x