Published : 20 Jul 2018 09:44 AM
Last Updated : 20 Jul 2018 09:44 AM

அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி: ரயில்வே அமைச்சர் தகவல்

அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச வை-பை அமைக்கப்படும் என மத்திய ரயில்வே இணையமைச்சர்  ராஜன் கோஹென் தெரிவித்தார். ரயில்வே துறை செலவு செய்யாமல் இந்த வசதி அமைக்கப்படும் என மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் கூறினார்.

கடந்த 2016-17-ம் ஆண்டில் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி அளிக்க திட்டமிடப்பட்டது. 2017-18-ம் ஆண்டில் 200 ரயில் நிலையங்களில் வை-பை அமைக்க திட்டமிடப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் 500 ரயில் நிலையங்களில் வை-பை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை மொத்தமாக 707 நிலையங்களில் வை-பை அமைக் கப்பட்டிருக்கிறது.

இதற்காக கூகுளின் துணை நிறுவனமான மஹாதா இன்பர்மேஷன் என்னும் நிறுவனத்துடன் ரெயில்டெல் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த நிறுவனம் ஏ மற்றும் ஏ1 பிரிவுகளில் உள்ள ரயில் நிலையங்களில் வை-பை வசதி அமைத்துக்கொடுக்கும்.

ஆண்டுக்கு ரூ.9,500 கோடி மீதம்

ரஷ்யாவை சேர்ந்த இயற்கை எரிவாயு நிறுவனமான கேஸ்புரோம்  உடன் நீண்ட கால அடிப்படையில் கெயில் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதனால் ரூ.8,500 கோடி முதல் ரூ.9,500 கோடி வரை மீதமாகும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்க

ளவைக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்துடன் 2040-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஒப்புக்கொண்ட உறுதிமொழியின்படி ரஷ்ய நிறுவனத்தால் இயற்கை எரிவாயுவினை அளிக்க முடியவில்லை. இதனால் கடந்த ஜனவரி புதிதாக ஒப்பந்தம் போடுவது தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கியது.புதிய ஒப்பந்தத்தின்படி முதல் கப்பல் கடந்த ஜூன் 4-ம்  இந்தியா வந்து சேர்ந்தது.

2018 முதல் 2040 வரை கச்சா எண்ணெய் விலை 50 டாலராக இருந்தால் சுமார் ரூ.8,500 கோடி மீதமாகும். 60 டாலராக இருந்தால் ரூ.9,000 கோடி மீதமாகும். 70 டாலராக இருக்கும் பட்சத்தில் ரூ.9,500 கோடி அளவுக்கு மீதமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்னும் தகவலை அமைச்சர் வெளியிடவில்லை. ஆனால் எரிவாயு இருக்கும் இடம், காலம் உள்ளிட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிகிறது.  ஆண்டுக்கு 25 லட்சம் டன் இறக்குமதி செய்ய கெயில் திட்டமிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த எக்ஸான் மொபில் கார்ப் நிறுவனத்துடன் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆண்டுக்கு 15 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும். இதனால் ரூ.4,000 கோடி அளவுக்கு மீதமாகும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் இயற்கை எரிவாயுவினை கையாளும் நான்கு துறைமுகங்கள் உள்ளன. குஜராத்தில் தாஹெஜ் மற்றும் ஹஸ்ரியா, மகாராஷ்டிராவில் தபோல் மற்றும் கேராளாவில் உள்ள கொச்சி துறை முகங்களில் இயற்கை எரிவாயு வினை கையாள முடியும். ஆண்டுக்கு 2.75 கோடி டன் இயற்கை எரிவாயுவினை இந்த துறைமுகங்கள் கையாளும் திறன் உடையவை என அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x