Published : 10 Jul 2018 08:20 AM
Last Updated : 10 Jul 2018 08:20 AM

இவரை தெரியுமா?: டேனியல் லோப்

அமெரிக்காவைச் சேர்ந்த தேர்ட் பாய்ண்ட் முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 1995-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

அமெரிக்க வெளியுறவு கவுன்சில் உறுப்பினர். அல்சீமர் நோய்க்கான ரொனால்ட் லோப் மையத்தினை தொடங்கியுள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்டம் பெற்றவர்.

கார்ப்பரேட் மற்றும் அரசு ஓய்வு திட்டங்கள், காப்பீடு மறு காப்பீடு, வளரும் சந்தை, சர்வதேச வங்கிகளின் முதலீடுகளை நிறுவனம் கையாளுகிறது.

பங்கு வர்த்தகம், கடன் சந்தை மற்றும் தனியார் முதலீடுகளில் பத்தாண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

துணிகர முதலீட்டு நிறுவனமான வார்பக் பின்கஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

லிகாட் பார்மா, போகோ புரொடக்ஸன், மாஸி எனர்ஜி, யாகூ உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x