Published : 30 Jun 2018 09:36 AM
Last Updated : 30 Jun 2018 09:36 AM

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்; தவறிழைப்போர் மீது கடும் நடவடிக்கை: நிதியமைச்சர் பியுஷ் கோயல் எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் நடைமுறை தளர்வால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் அதிகரித்திருக்கலாம் என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான தகவல்கள்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நேற்று மத்திய நிதியமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில்,

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அறிமுகப்படுத்திய வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவதில் தாராளக் கொள்கையால் டெபாசிட் அதிகரித்திருக்கலாம். எனினும் இந்தியர்களின் முதலீடுகள் அதிகரித்திருப்பதற்கு பின்னால் விதிமீறல்கள் நடைபெற்றிருந்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆண்டு தொடக்கத்திலிருந்து நிதி ஆண்டு இறுதி வரையிலான அனைத்து டெபாசிட் விவரங்ளையும் இந்தியா பெற்றுவிடும் என்றார். 2018, ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில் சுவிஸ் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியர்களின் முதலீடுகள் நிதியாண்டு இறுதி யில் இந்தியாவுக்கு கிடைக்கும்.

2017-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு 50 % அதிகரித்துள்ளது. ரூ.7,000 கோடியாக உயர்ந்துள்ளது. கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளால் மூன்று ஆண்டுகளாக குறைந்திருந்த முதலீடு கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது.

சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, வெளிநாடுகளிலிருந்து 2017-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 3 %அதிகரித்து ரூ.100 லட்சம் கோடியாக உள்ளது.

இது தொடர்பான கேள்வி களுக்கு பதில் கூறிய அமைச்சர், இந்த முதலீடு முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அல்லது கறுப்பு பணம் என்று எப்படி முடிவுக்கு வர முடியும். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் கொள்கையில் தாராளத்தை கொண்டு வந்தார். 40 சதவீத பணம் இந்த வகையில் செல்கிறது. இதன் மூலம் தனிநபர்கள் ஆண்டுக்கு 2,50,00 டாலர்கள் கொண்டு செல்ல முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் முறைகேடான பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சுவிஸ் வங்கிகளில் இந்தி யர்கள் டெபாசிட் செய்வது 45 % குறைந்துள்ளது என்று அரசு கூறி வந்த நிலையில் 50 % அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளிவாகியுள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x