Published : 29 Jun 2018 08:54 AM
Last Updated : 29 Jun 2018 08:54 AM

சென்னையில் பேட்டரி கார்களை தயாரிக்க ஹூண்டாய் திட்டம்

சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஆலையில் பேட்டரி கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் 8 புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆண்டுக்கு 7 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக உயர்த்த திட்ட மிட்டுள்ளது.

இந்நிறுவனம் புதிதாக எஸ்யுவி மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது 2019-ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இருக்கும் என்று தெரிகிறது. தொடக்கத்தில் இந்த மாடல் எஸ்யுவி இறக்குமதி செய்து விற்பனை செய்வதெனவும் பின்னர் இங்கு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே. கூ தெரிவித்தார்.

நீண்ட கால அடிப்படையில் சென்னை ஆலையில் பேட்டரி கார் உற்பத்தி சரியான முடிவாக இருக்கும். 15 நகரங்களில் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான விலை மற்றும் விற்பனை இலக்கு ஆகியவை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளோம். ஆனால் பெருமளவிலான மக்களைச் சென்றடைய அரசின் ஆதரவு தேவை என்று குறிப்பிட்டார். பேட்டரி வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். அத்துடன் ஃபேம் திட்டத்தின்கீழ் பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பல அமைக்கப்படவேண்டியது அவசியம். அதிக எண்ணிக்கையில் அமைப்பதற்கு அரசின் உதவி அவசியம் என்று அவர் குறிப் பிட்டார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x