Published : 29 Jun 2018 08:53 AM
Last Updated : 29 Jun 2018 08:53 AM

டிஷ் டிவி: 5 புதிய பேக்கேஜ்கள் அறிமுகம்

டிஷ் டிவி நிறுவனம் தனது தமிழ்நாட்டில் 5 புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜ்களில் தமிழ் சேனல்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்து 65-க்கும் மேற்பட்ட சேனல்கள் வழங்க இருப்பதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சுக்பிரீத் சிங் கூறினார். ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் உள்ள சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில் கிளாசிக் ஜாய், ஏதேனும் இரண்டு பிராந்திய மொழியில் உள்ள சேனல்களை மட்டும் பார்க்கும் பிரீமியர் ஜாய் ஆகிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பிரீமியர் ஹிந்தி, பிரீமியர் வேர்ல்ட், சுப்ரீம் வேர்ல்ட் ஆகியவை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிற சேவைகளாகும். டிஷ் டிவி இணைப்புக்கான 8 புதிய சலுகைகளையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 30 லட்சம் பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தாதாரர்கள் ஆக்குவதை இலக்காக கொண்டுள்ளோம் என சுக்பிரீத் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x