Published : 23 Jun 2018 08:25 AM
Last Updated : 23 Jun 2018 08:25 AM

இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

இந்திய பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் இரண்டு மடங்காக உயரும் என்றும் குறிப்பிட்டார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துக்காக கட்டப்படும் வாணிப பவன் கட்டிய அடிக்கல் நாட்டுவிழாவில் இதனைக் குறிப்பிட்டார். பிரதமர் மேலும் கூறியதாவது,

இந்தியாவின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கு கொண்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகம் உலக அளவில் இரண்டு மடங்கு உயர்ந்து 3.4 சதவீதமாக வேண்டும். அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் எளிதாக தொழில்புரிவதற்கான சூழலை மேம்படுத்தப்பட்டுள்ளது. பேரியல் பொருளா தார வளர்ச்சிக்கு ஏற்ப பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறை போன்றவை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. பேரியல் பொருளாதாரத்துக்கான சாதகமான சமிக்கைகள் உருவாகி யுள்ளன.

2017-18 நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவில் ஜிடிபி 7.7 சதவீதத்தினை எட்டியது. தற்போது 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சியை எட்டும். இந்த வளர்ச்சியை இரட்டை இலக்கமாக உயர்த்துவதற்கான இலக்கு வைத்துள்ளோம். தற்போது 7 சதவீதம் முதல் 8 சதவீதமாக உள்ள ஜிடிபி வளர்ச்சியை இரட்டை இலக்க வளர்ச்சியாக கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நான் உங்களுக்கு விளக்க வேண்டும். இந்தியா எப்படி இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டும், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக எப்படி வளரும் என்பதை அறிந்து கொள்வதற்காக உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மாநிலங்கள் இதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச ஏற்றுமதியில் 1.6 சதவீதமாக உள்ள இந்தியாவின் பங்களிப்பை குறைந்தபட்சம் 3.4 சதவீதமாக அதிகரிக்க வர்த்தக அமைச்சகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோல நாட்டின் அனைத்து தேவைகளுக்கும் இறக்குமதியை நம்பியிருக்காமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். மின்னணு பொருள் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் வர்த்தகம் உலக அளவில் இரண்டு மடங்கு அதிகரிக்கவும், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை உறுதி ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டதுடன் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தினால் பனிரெண்டுக்கும் மேற்பட்ட வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. வருமான வரி செலுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் மோடி சுட்டிக் காட்டினார். மறைமுக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். ஆனால் ஜிஎஸ்டிக்கு முன்னர் 60 ஆயிரம் பேர்தான் மறைமுக வரி செலுத்துபவர்களாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார். இந்த இலக்கினை அடையும் குறிப்பிட்ட காலத்துக்குள் வாணிப பவன் கட்டிடம் கட்டி முடிக்கபட்டிருக்கும் என்றும் கூறினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x