Published : 10 Jun 2018 09:12 AM
Last Updated : 10 Jun 2018 09:12 AM

16,500 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு: 80 ஆயிரம் நிறுவனங்கள் மீது தீவிர கண்காணிப்பு

மத்திய அரசு 16,500 போலி நிறுவனங்களை கண்டுபிடித்துள்ளது. இது தவிர 80 ஆயிரம் நிறுவனங்களின் நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இவை சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்நிறுவனங்கள் மிகச் சிறியவை, ஆனால் இவற்றின் பணப் புழக்கம் மிக அதிக அளவில் உள்ளதாக தெரிகிறது. இத்தகைய நிறுவனங்கள் பொதுவாக ஷெல் நிறுவனங்கள் அதாவது போலி நிறுவனங்கள் என தீர்மானிக்கப்படும். இந்நிறுவனங்கள் பணத்தை ஆன்லைன் மூலமான பரிவர்த்தனையில் செயல்படுத்துகின்றன.

இந்நிறுவனங்களை சிவப்பு கொடி என்ற எச்சரிக்கை வளையத்துக்குள் தீவிர மோசடி குற்றங்களை விசாரிக்கும் அலுவலகம் வைத்துள்ளது. ஆனால் எந்தெந்த நிறுவனங்கள் இந்த வளையத்துக்குள் உள்ளன என்ற விவரத்தை அரசு தெரிவிக்க மறுத்துவிட்டது.

போலி நிறுவனங்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக நிறுவன சட்டங்களின் படி நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. நிறுவன பதிவாளர்கள் வசம் பதிவான நிறுவனங்களில் 2.26 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதேபோல இந்த போலி நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருந்த 3.1 லட்சம் இயக்குநர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக 2.26 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காட்டப்பட்டு அவற்றின் மீதான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள் ளன.

இவ்விதம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் முன்னாள் இயக்குநர்கள் காசோலைகளில் கையெழுத்திட்டாலும் அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் செயல்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல இயக்குநர்கள் தங்கள் இஷ்டம் போல பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்ப ட்டுள்ளன. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தகைய போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் பதிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x