Published : 02 Jun 2018 08:49 AM
Last Updated : 02 Jun 2018 08:49 AM

சாந்தா கொச்சார் கட்டாய விடுப்பில் செல்லவில்லை: ஐசிஐசிஐ வங்கி விளக்கம்

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் கட்டாய விடுப்பில் செல்லவில்லை என்று வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கமான ஆண்டு விடுமுறையில்தான் சென்றுள்ளார் என்றும், அவரை கட்டாய விடுப்பு எடுக்குமாறு இயக்குநர் குழு கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாந்தா கொச்சாரின் கணவர், வீடியோகான் குழுமத்துடன் இணைந்து தொழில் புரிந்துள்ளார். அதனால் வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் சாந்தா கொச்சார் ஆதரவாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால் இதை ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு மறுத்துள்ளது. அத்துடன் அவர் வழக்கமான ஆண்டு விடுப்பில் சென்றுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்ட விடுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்திலிருந்து கொச்சார் வங்கிக்கு வரவில்லை. அவர் ஜூன் 10-ம் தேதி வருவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தனி நபர் குழுவை அமைப்பதென மே 29-ம் தேதி முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x