Published : 02 Jun 2018 08:47 AM
Last Updated : 02 Jun 2018 08:47 AM

இவரை தெரியுமா?: ஜான் ரெய்னி

பே பால் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

பே பால் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள், கருவூலம், நிதி திட்டமிடல் மற்றும் ஆய்வுகள், முதலீட்டாளர் தொடர்பு, நிறுவன உள் தணிக்கை, வரி, விலை திட்டமிடல் போன்ற பிரிவுகளை கவனித்து வருகிறார்.

கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர்.

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

சிஎன்பிசி குளோபல் சிஎஃப்ஓ கவுன்சில், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் சிஎஃப்ஓ நெட்வொர்க் போன்ற அமைப்புகளின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

நாஸ்டாக் பங்குச் சந்தையின் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர் இதழால் சிறந்த தலைமை நிதி அதிகாரி என குறிப்பிடப்பட்டவர்.

டெக்ஸாஸின் பேலோர் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x