Published : 01 Jun 2018 04:39 PM
Last Updated : 01 Jun 2018 04:39 PM

ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் : ‘ஹாலிடே ஹங்காமா’ 299ரூபாய்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விடுமுறை நாட்களை முன்னிட்டு அடுத்த அதிரடி ஆஃபரை இன்று அறிவித்துள்ளது. ‘ஹாலிடே ஹங்காமா’ என்ற பெயரில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்காக ரூ.399 ரீசார்ஜை ரூ.299-க்கு ஜியோ நிறுவனம் வழங்குகிறது.

அதாவது வழக்கமாக ரூ.399க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த ஹாலிடே ஹங்காமா திட்டத்தின் மூலம் ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தாலே போதுமானது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டியும், நாள்தோறும் 4ஜி வேகத்தில் 1.5 ஜிபி இலவச டேட்டாவும், இலவச அழைப்பு செய்யும் வசதியும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், ஹாலிடே ஹங்காமா திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்கள் ரிலையன்ஸின் மை ஜியோ ஆப்ஸ் மூலம், போன்பே(PhonePe)செயலி மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும்.

வழக்கமாக ரூ.399-க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.100 கேஷ்பேக்காக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரில் இரு முறைகளை ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதில் நாம் செய்யும் ரீசார்ஜில் இருந்து கழித்துக்கொள்ளும் வசதியாகவும், அல்லது ரீசார்ஜ் செய்துவிட்டு கேஷ்பேக் பெற்றுக்கொள்ளும் முறையைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது ரீசாராஜ் செய்யும் போதே, ஹங்காமா திட்டத்தின் கீழ் ரூ.399-க்கு ரூ.299 செலுத்தினால் போதுமானது. அல்லது, ரூ.399 செலுத்திவிட்டால், அடுத்த சில நிமிடங்களில் ரூ.100 உங்களின் ரிலையன்ஸ் ஜியோ வவுச்சருக்கு ரீசார்ஜ் செய்யப்படும்.

வழக்கமாக 84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.399 செலுத்துவதற்குப் பதிலாக ஹங்காமா திட்டத்தில் ரூ.299 செலுத்தினாலே போதுமானது இந்தச் சலுகை இன்று(ஜுன் 1-ம்தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை மட்டுமே என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதில் ரூ.199-க்கு மாதம்தோறும் வாடகைக் கட்டணமாகச்செலுத்தினால், அனைத்து அழைப்புகளும் இலவசமாகவும், வெளிநாடு அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 50 காசுகளும், மாதத்துக்கு 25 ஜிபி அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கும். மேலும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் இலவசமாக அனுப்பிக்கொள்ள முடியும். ஒருவேளை 25 ஜிபி டேட்டாவை ஒருமாதத்துக்கு முன்பாக தீர்த்துவிட்டால், அடுத்து ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ.20 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x