Published : 01 Jun 2018 08:54 AM
Last Updated : 01 Jun 2018 08:54 AM

இவரை தெரியுமா?- மகேஷ் மிஸ்ரா

இந்தியன் மார்ட்கேஜ் கேரண்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2018 ஜனவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

நேஷனல் ஹவுஸிங் வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஜென் குரோத் பைனான்ஸ் ஆகியவை இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கின.

2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் வரை வரை அவிவா நிறுவனத்தில் தலைமை விநியோக அதிகாரியாக பணியாற்றினார்.

எக்ஸ்பீரீயன் இந்தியா நிறுவனத்தில் விற்பனை இயக்குநர், ஸ்டாண்டர்டு அண்ட் சார்ட்டர்டு வங்கியில் முன்னுரிமை வங்கி, கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பிரிவுகளின் தலைமை பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஒடிசாவில் உள்ள உத்கல் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டமும், இந்திய சர்வதேச வர்த்தகக் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியும் முடித்துள்ளார்.

நிதிச் சேவைத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். மார்ட்கேஜ், ரிஸ்க் பகுப்பாய்வு, மோசடி மற்றும் அடையாளம் கண்டறிதல் துறைகளில் வல்லுநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x