Published : 30 Apr 2018 09:17 AM
Last Updated : 30 Apr 2018 09:17 AM

2017-18 நிதியாண்டில் ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி 8% சரிவு

அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி சந்தைகளில் தேவை குறைந்ததைத் தொடர்ந்து ஜெம் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி 8 சதவீதம் சரிந்துள்ளது. ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி கவுன்சிலின் (ஜிஜெஇபிசி) தரவுகள் படி 2016-17 நிதியாண்டில் மொத்த ஜெம் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி 3,547 கோடி டாலர்கள் ஆகும். 2017-18 நிதியாண்டில் இது 3,272 கோடி டாலராக குறைந்துள்ளது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இந்தத் துறையின் பங்களிப்பு 14 சதவீதம் ஆகும். வெள்ளி நகைகள், தங்க நாணயங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக் குறைவும், சரக்குகள் திரும்பி வருவது அதிகரித்ததும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்திய விற்பனைப்பொருள் ஏற்றுமதி திட்டம் (எம்ஈஐஎஸ்) மூலம் இந்த இழப்புகளைக் குறைப்பதற்கான மானியம் வழங்கப்படவேண்டுமென இந்தத் துறையினர் கோரிக்கை வைத்துள்ளார்கள். சரக்கு மற்றும் சேவை வரியும் ஏற்றுமதியை பாதித்துள்ளதாக இந்தத் துறையினர் கூறுகின்றனர். 2017-18 நிதியாண்டில் வெள்ளி ஏற்றுமதி 15.8 சதவீதமும், தங்க நாணய ஏற்றுமதி 63.56 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன. இருப்பினும் தங்க நகை ஏற்றுமதி 11% அதிகரித்து 967 கோடி டாலராக உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இந்தியா அதிகளவு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த ஜெம் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. கடந்த நிதியாண்டில் திரும்பி வந்த பொருட்களின் மதிப்பு 826 கோடி டாலர் ஆகும். 2016-17 நிதியாண்டில் இது 770 கோடி டாலராக இருந்தது. இந்தத் துறையில் இந்தியாவின் முக்கியமான போட்டியாளராக சீனா உள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x