Published : 20 Mar 2018 09:04 AM
Last Updated : 20 Mar 2018 09:04 AM

இவரை தெரியுமா?: அஜய் சஹாய்

மத்திய வர்த்தக அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பின் ( FIEO) தலைமைச் செயல் அதிகாரி. 2010-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

இந்திய ஆட்சிப் பணியாளர். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து மத்திய-மாநில அரசுகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

1996-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை மத்திய ஏற்றுமதி வர்த்தகத் துறையின் இணை பொது இயக்குநராக பணியாற்றினார்.

ஏற்றுமதி மேம்பாட்டு சங்கங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம், கமாடிட்டி வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகளில் சார்பிலான பிரதிநிதியாகவும் உள்ளார்.

இந்திய ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். 7,200 ஆக இருந்த ஏற்றுமதியாளர் எண்ணிக்கையை கடந்த ஐந்து ஆண்டுகளில் 16,000 ஆக உயர்த்தியுள்ளார்.

அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் வரலாறு பிரிவில் பட்டம் பெற்றவர். அமிதி பல்கலைக் கழகத்தில் தத்துவவியலில் முனைவர் பட்டமும், மேலாண்மை உயர்கல்வியும் முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x