Published : 03 Mar 2018 09:27 AM
Last Updated : 03 Mar 2018 09:27 AM

இவரை தெரியுமா?: லியேன் காரட்

போயிங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் வானியலை உள்ளடக்கிய பிடிஎஸ் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி. பிப்ரவரி 2016 முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

1988-ல் போயிங் நிறுவனத்தில் இணைந்த இவர் போயிங்கின் வெர்டிகல் லிஃப்ட் பிரிவின் நிர்வாக இயக்குநர் உட்பட பாதுகாப்பு சார்ந்த பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க ராணுவ அறங்காவலர் குழு உறுப்பினர், வணிகம் மற்றும் மேற்படிப்புக்கான குழுமமான பிஹெச்இஎஃப்பின் உறுப்பினர் முதலிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

அமெரிக்க ராணுவத்தின் போர் வீரர்களை உற்சாகப்படுத்த கலை நிகழ்ச்சிகளை நடத்தும் யுஎஸ்ஓ அமைப்பின் ஆளுநர் குழு உறுப்பினர்களில் ஒருவர்.

2017-ல் பார்ச்சூன் பத்திரிகையால் உலகின் வலிமை வாய்ந்த பெண்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டவர்.

அமெரிக்காவின் கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிபிஏ பட்டமும், விச்சிதா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x