Last Updated : 13 Feb, 2018 04:22 PM

 

Published : 13 Feb 2018 04:22 PM
Last Updated : 13 Feb 2018 04:22 PM

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு: ஜனவரியில் 14% உயர்வு

இந்தியாவில் தொழில்துறை சற்று சீரடைந்து வருவதால் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது அதிகரித்து வருவதாகவும் ஆன்லைன் மூலம் வேலை ஆட்கள் தேர்வு, இந்த ஜனவரியில் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது..

இந்தியாவில் கடந்த ஒராண்டிற்கும் மேலாக வேலையின்மை அதிகரித்து வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதும் கடுமையாக குறைந்துள்ளது. இந்நிலையில் முந்தைய ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு ஜனவரியில் பல்வேறு நிறுவனங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது சற்று உயர்ந்துள்ளதாக வேலைவாய்ப்பு இணையதளமான நவ்கிரி டாட் காம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:

‘‘பல்வேறு முக்கிய துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிட்டால், 2018ம் ஆண்டு ஜனவரியில், இன்சூரன்ஸ் துறையில் 73 சதவீதமும், வாகனத்துறையில் 44 சதவீதமும் வளர்ச்சி காணப்படுகிறது. இதுபோலவே தகவல் தொழில்நுட்பத்துறை சாராத வங்கிகள், நிதிசேவை, பொறியியல் உள்ளிட்ட துறைகளிலும் சற்று வளர்ச்சி காணப்படுகிறது. எனினும் தற்போது நிலவும் தொழில் மந்த நிலை மேலும் சில மாதங்களுக்கு தொடரவே வாய்ப்புள்ளது.

2018ம் ஆண்டு ஜனவரியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 43 சதவீத அளவிற்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி, நிதிசேவை, பொறியியல் துறைகளில் 41 சதவீத அளவிற்கு வேலைவாய்ப்பு கூடுதலாக கிடைத்துள்ளது. மருந்து வணிகத்தில் 34 சதவீதமும், உயிர் தொழில்நுட்பததுறையில் 14 சதவீதமும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பிபிஓ துறையில் 9 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஐடித்துறையில் 6 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நகரங்களை பொறுத்தவரை டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் வேலைவாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் சென்னை, பெங்களூருவில் நிலைமை மாற்றமின்றி தொடருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வேலை பெற்றவர்களை பொறுத்தவரை 2017ம் ஆண்டு ஜனவரியை ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு ஜனவரியில் 14 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது’’ எனக்கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x