Published : 13 Feb 2018 10:05 AM
Last Updated : 13 Feb 2018 10:05 AM

கார் விற்பனை 1.25% சரிவு

ஜனவரி மாதத்தில் கார் விற்பனை 1.25 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பயணிகள் வாகன எண்ணிக்கை 7.75 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜனவரியில் 2,65,389 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன. இந்த ஆண்டு ஜனவரியில் அந்த எண்ணிக்கை 7.75 சதவீதம் உயர்ந்து 2,85,477 வாகனங்கள் விற்பனை ஆகியிருக்கிறன. கார்களை பொறுத்தவரை கடந்த வருடம் ஜனவரியில் 1,86,596 கார்கள் விற்பனை ஆகியிருந்தன. அந்த எண்ணிக்கை இந்த வருடம் ஜனவரியில் 1.25 சதவீதம் குறைந்து 1,84,264 கார்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.

8,19,385 மோட்டார் சைக்கிள்கள் கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனை ஆகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் விற்பனை 28.64 சதவீதம் உயர்ந்து 10,54,062 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆகியுள்ளன. ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டில் 33.43 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 16,84,066 இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் 12,62,140 இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.

ஒட்டுமொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 30.71 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 16,20,179 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன. இந்த ஆண்டு ஜனவரியில் 21,17,746 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x