Published : 13 Feb 2018 09:58 AM
Last Updated : 13 Feb 2018 09:58 AM

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா நஷ்டம் ரூ.637 கோடி

பொதுத்துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா டிசம்பர் காலாண்டில் ரூ.637 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. முதலீட்டின் மீதான வருமானம் மற்றும் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு அதிகமாக இருப்பதால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.64.10 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் ரூ.3,086 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.2,483 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 20.10% என்னும் உச்சபட்ச (ரூ.13,720 கோடி) அளவினை தொட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 15.98% மட்டுமே இருந்தது. நிகர வாராக்கடனும் 10.62 சதவீதத்தில் இருந்து 11.96 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.964 கோடியாக அதிகரித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x