Last Updated : 05 Feb, 2018 08:39 PM

 

Published : 05 Feb 2018 08:39 PM
Last Updated : 05 Feb 2018 08:39 PM

நிதியளவில் வலுவாக உள்ள நிறுவனங்களுக்கு குறைந்த வரிச்சுமை!

2016-17-ம் நிதியாண்டில் இந்தியாவின் அதிலாப நிறுவனங்கள் தங்கள் லாபங்களில் 23.9% வரியையே சராசரியாகச் செலுத்தியுள்ளன. அதாவது 34.6% ஆக இருக்க வேண்டிய வரி விகிதம்  23.9% ஆக மட்டுமே உள்ளது. காரணம் அரசு வழங்கிய பெரிய அளவிலான சலுகைகள், கழிவுகளே என்கிறது வருவாய்த்துறை ஆய்வு.

கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைக்கப்பட்டு, அனைத்துச் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டால் கூட இந்த 335 நிறுவனங்களின் வரிச்சுமையில் சிறிய மாற்றம் கூட இருக்காது என்று வருவாய்த்துறை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 2016-17-ல் இந்த 335 நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.500 கோடி அல்லது இதற்கு மேல் இருக்கிறது. இதனுடன் ரூ.500 கோடிக்கும் குறைவாக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் 29% வரி செலுத்தியுள்ளன. இதே போல்தான் ரூ.1 கோடிக்கும் குறைவான லாபம் உள்ள நிறுவனங்களும் அதிக அளவில் வரி செலுத்தியுள்ளன.

சிறு நிறுவனங்களுக்கு ‘அனுகூலமற்ற சூழல்’:

சட்டம் அனுமதிக்கும் பல்வேறு வரிச்சலுகைகள், வரிக்கழிவுகள் ஆகியவற்றின் பலன்களை மிகச்சிறிய நிறுவனங்கள் அடைய முடிவதில்லை, இதனால் அதிக வரிச்சுமையை மிகச்சிறிய நிறுவனங்கள் சுமந்து வருகின்றன. முந்தைய ஆண்டுகளில் நிதி ஆதாரங்களில், லாபங்களில் பல்வேறு அளவுகளில் உள்ள நிறுவனங்களின் வரிசெலுத்துதலில் பெரிய வித்தியாசங்கள் இருந்ததில்லை.

நவம்பர் 30, 2017-ல் சுமார் 6.01 லட்சம் நிறுவனங்கள் சமர்ப்பித்த வரிக்கணக்குகளின் அடிப்படையில் வருவாய்த்துறை ஆய்வு அமைந்துள்ளது. 2016-17 வருவாய்க் கணக்குகள் 2017-18-ல் தாக்கல் செய்யப்படும் இந்த நிதியாண்டு முடிவடையும்போது இன்னும் கூடுதல் நிறுவனங்கள் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம்.

2015-16-ல் வரி விகிதங்கள் அதிகமாக இருந்ததாக வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் தங்கள் லாபங்களில் 25.9% வரி செலுத்தின. இதே வேளையில் மிகச்சிறிய நிறுவனங்கள் அல்லது ரூ.1 கோடிக்கும் குறைவான லாபம் ஈட்டும் நிறுவனங்கள் 30% வரி செலுத்தியுள்ளன. 2016-17-ல் அதிலாப நிறுவனங்கள், குறைந்த மிகக்குறைந்த லாப நிறுவனங்கள் செலுத்தும் வரியின் அளவில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. 2015-16-ல் இந்த இடைவெளி குறைவாக இருந்தது. அதாவது இந்த இடைவெளி அல்லது வரி வித்தியாசம் 2016-17-ல் 5.5% ஆக உள்ளது, ஆனால் இது முந்தைய ஆண்டில் 4.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கும் முந்தைய 2 ஆண்டுகளில் வித்தியாசம் 6% புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-17-ம் ஆண்டில் 6.01 லட்சம் நிறுவனங்கள் தாக்கல் செய்த வரிக்கு முந்தைய லாபங்களில் 335 பணக்கார நிறுவனங்களின் பங்களிப்பு 61.2% ஆகும்.

தரவுகளை வேறு கோணத்தில் ஆராய்ந்தால் 2016-17-ல் வரிக்கணக்குத் தாக்கல் செய்த 70% நிறுவனங்கள் தங்கள் லாபங்களில் 30%க்கும் குறைவாக வரி செலுத்தியுள்ளன. 17% நிறுவனங்கள் 30-33% வரி செலுத்தியுள்ளன, 6%க்கும் கொஞ்சம் கூடுதலான நிறுவனங்கள் 33%க்கும் கூடுதலாக வரி செலுத்தியுள்ளன. 6.01 லட்சம் நிறுவனங்களின் 30% அல்லது அதற்கும் மேல் வரி செலுத்திய நிறுவனங்கள் 36.6% நிறுவனங்களாகும்.

மேலும், பல்வேறு வரிச்சலுகைகளில் உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாக பயனடைந்து வந்துள்ளன. இவர்களது வரி விகிதம் 24.7%, சேவைத்துறை நிறுவனங்களின் வரி விகிதத்தை விட இது 4% புள்ளிகள் குறைவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x