Published : 05 Feb 2018 08:44 AM
Last Updated : 05 Feb 2018 08:44 AM

7 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்

கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 7,000 பெரும் பணக்காரர்கள் வெளியேறி இருக்கின்றனர். நியூ வெர்ல்ட் வெல்த் நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் இருந்து 2015-ம் ஆண்டு 4,000 பெரும் பணக்காரர்கள் வெளியேறி இருக்கின்றனர். 2016-ம் ஆண்டில் 6,000 பணக்காரர்களும், 2017-ம் ஆண்டில் 7,000 பணக்காரர்களும் வெளியேறி இருக்கின்றனர். சர்வதேச அளவில் பார்க்கும்போது சீனாவில் இருந்து 10,000 பெரும் பணக்காரர்கள் (2017-ம் ஆண்டில்) அந்த நாட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இந்த பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து துருக்கி (6,000), இங்கிலாந்து (4,000), பிரான்ஸ் (4,000) மற்றும் ரஷ்யாவில் இருந்து 3,000 பெரும் பணக்காரர்களும் அந்தந்த நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து வெளியேறுபவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரகம், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகம் செல்கின்றனர். சீனாவில் இருந்து வெளியேறுபவர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அதிகம் செல்கின்றனர்.

மேலும் இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை பணக்காரர்கள் வெளியேறுவது ஒரு பிரச்சினை இல்லை. காரணம் இந்த இரு நாடுகளிலும் புதிய பெரும் பணக்காரர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். வெளியேறுபவர்களை விட புதியதாக உருவாகும் பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது.

மாறாக, 10,000 பெரும் பணக்காரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர். பெரும் பணக்காரர்கள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா இரண்டாம் (9,000) இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் கனடா (5,000) ஐக்கிய அரபு எமிரகம் (5,000) இருப்பதாக நியூ வெர்ல்ட் வெல்த் நிறுவனம் கூறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x