Last Updated : 01 Feb, 2018 05:22 PM

 

Published : 01 Feb 2018 05:22 PM
Last Updated : 01 Feb 2018 05:22 PM

8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு : மகளிர் குழுகளுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கேஸ் இணைப்பு 2018-19ம் ஆண்டில் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார். அப்போது உஜ்வாலா திட்டம் குறித்து அவர் கூறியதாவது-

கிராமங்களில் உள்ள ஏழை பெண்கள் விறகு அடுப்பில் சமைப்பதில் இருந்து விடுவித்து, சமையல் கேஸ் எரிவாயு இணைப்பு கொடுக்கும் உஜ்வாலா திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் முதல் கட்ட இலக்கு 5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்து. ஆனால், திட்டத்தை செயல்படுத்தியது, பெண்களிடயே இந்த திட்டத்துக்கான வரவேற்பு ஆகியவற்றைப் பார்த்து அடுத்த நிதி ஆண்டில் 8 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக 2019ம் ஆண்டுக்குள் அவர்களுக்கு ரூ. 75 ஆயிரம் கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவது அதிகரிக்கப்பட்டு 37 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x