Published : 01 Feb 2018 10:44 AM
Last Updated : 01 Feb 2018 10:44 AM

மத்திய பட்ஜெட் 2018-19: தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் இன்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு சில எதிர்பார்ப்புகள் உள்ளன.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். மேலும் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் எதிர்பார்ப்பு என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

*. 2015-ல் இருந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை. தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமையும் என்ற அறிவிப்பு.

* மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு.

* சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான வெள்ள மேலாண்மை திட்டம்

* சென்னை - தூத்துக்குடி இடையேயான சரக்கு ரயில் பாதை

* சென்னை - மதுரை- கன்னியாகுமரி இடையேயும் மதுரை - கோவைக்கும் இடையேயான பயணிகள் ரயில் திட்டம்

* கன்னியாகுமரியில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைமுகம். அதில் மீன் பதப்படுத்தும் மையமும் அமைத்தல்.

* கோயம்பேடு - பூந்தமல்லி- வாலாஜாபேட் இடையே ரூ.1500 கோடி மதிப்பிலான 6 வழிப்பாதைக்கு நிதி ஒதுக்கீடு.

* ரூ.7446 கோடி செலவில், சென்னை ரிங் ரோடு திட்டத்துக்கான அனுமதி.

* தேசிய நெடுஞ்சாலை 45-ஏ மேம்படுத்துதல். அதை 4 வழிப்பாதையாக  மாற்றுதல்.

* தேசிய நெடுஞ்சாலையில் ரூ.2,300 கோடி செலவில் சாலை பாதுகாப்பு திட்டம்.

* கோதாவரி- பாலாறு- பென்னாறு- காவிரி நதி நீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு. கோதாவரி உபரி நீரை தமிழகத்துக்கு திருப்பிவிடுதல்

* நாகை - கன்னியாகுமரி இடையேயான சாலையை மேம்படுத்துதல்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x