Published : 01 Feb 2018 08:57 AM
Last Updated : 01 Feb 2018 08:57 AM

மொபைல் எண்ணை மாற்றும் கட்டணம் ரூ.4 ஆக குறைப்பு: டிராய் அறிவிப்பு

மொபைல் எண்ணை மாற்றுவதற்கான கட்டணத்தை 79% அளவுக்கு டிராய் குறைத்திருக்கிறது. முன்பு மொபைல் எண்ணை மாற்றுவதற்கு ரூ.19 செலுத்த வேண்டும், தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 4 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மொபைல் தொடர்பு வழங்கும் நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்றால் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் வசதியை சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியது. அதற்கு கட்டணம் ரூ.19 என்னும் அளவில் இருந்தது. இந்த தொகை மிகவும் அதிகம் என்பதால் கடந்த டிசம்பர் மாதத்தில் இது குறித்த விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஜனவரி 16-ம் தேதி நடந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து தரப்பு கருத்தினரையும் பரிசீலனை செய்த பிறகு புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பதாக டிராய் தெரிவித்திருக்கிறது.

இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியாகும் நாள் முதல், புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டண குறைப்பால் மொபைல் எண்ணை மாற்றுபவர்களின் எண்ணிக்கை உயரும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம். பல சமயங்களில் வாடிக்கையாளர்களின் கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. புதிய அறிவிப்பு வாடிக்கையாளர் மற்றும் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என சி.ஓ.ஏ.ஐ. அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜன் எஸ் மேத்யூஸ் தெரிவித்தார். கடந்த 2010-11-ம் ஆண்டில் 64 லட்சம் எண்களும், 2014-15-ம் நிதி ஆண் டில் 3.68 கோடியும், 2016-17-ம் நிதி ஆண்டில் 6.36 கோடி் எண்களும் மாற்றப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x