Published : 01 Feb 2018 08:55 AM
Last Updated : 01 Feb 2018 08:55 AM

ஆட்டோ எக்ஸ்போவில் கியா மோட்டார்ஸ்

கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் டெல்லி யில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ - 2018 கண்காட்சியில் முதல் முறையாக பங்கேற்கிறது. இந்த கண்காட்சிக்கென உருவாக்கப்பட்ட கான்செப்ட் காரை இது காட்சிப்படுத்துகிறது. இது தவிர சர்வதேச அளவில் இந்நிறுவனத்தயாரிப்புகளில் பிரபல மான 16 மாடல் கார்களையும் இது காட்சிப் படுத்துகிறது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்நிலையில் இந் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க முடிவு செய்து அனைத்து பிரபல தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது.இந்திய சந்தைக்கேற்ப புதிய எஸ்யுவி மாடலை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x