Published : 01 Feb 2018 08:53 AM
Last Updated : 01 Feb 2018 08:53 AM

ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் 27% சரிவு

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் சரிந்து ரூ.1,894 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,611 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.27,876 கோடி யாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.28,501 கோடியாக இருக்கிறது.

நிகர வட்டி வருமானம் 6 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.14 சதவீதமாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 7.82 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 7.20 சதவீதமாக மட்டுமே இருந்தது. நிகர வாராக்கடனும் 3.96 சதவீதத்தில் இருந்து 4.20 சதவீத மாக இருந்தது. வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மிக அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.2,712 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.3,569 கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 0.08 சதவீதம் சரிந்து இந்த பங்கு முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x