Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM

லண்டனில் சொத்து முடக்கம்: விஜய் மல்லையாவின் வார செலவுக்கு ரூ.4.5 லட்சம் - லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால் அவரது வார செலவுக்கு ரூ.4.5 லட்சம் (5,000 பவுண்டுகள்) வழங்க லண்டன் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் 3-ம் தேதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த விசாரணையின் போது இந்தியாவில் விஜய் மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதற்கு அளித்த உத்தரவு சர்வதேச அளவில் பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனால் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

சொத்துகள் முடக்கப்பட்டதால் தனது வார செலவுக்கு வழங்கப்படும் தொகையை 5,000 பவுண்டிலிருந்து 20,000 பவுண்டாக உயர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கையை வழங்கறிஞர்கள் மறுத்தனர். இறுதியில் விஜய் மல்லையாவின் வார செலவுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கவே லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் சொத்துகள் முடக்கப்பட்டதாக வந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதாடினர். இருப்பினும் லண்டன் நீதிமன்றம் இதுகுறித்து எந்தவொரு உத்தரவையும் வழங்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x