Published : 05 Dec 2015 12:05 PM
Last Updated : 05 Dec 2015 12:05 PM

7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

நிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு என்பதையும் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

டெல்லியில் நடந்த விழாவில் இவ்வாறு கூறினார் மேலும் அவர் கூறியதாவது. தனிப்பட்ட முறையில் நிதிப்பற்றாக்குறை இலக்கு குறித்த கவலை எனக்கு இல்லை. மத்திய அரசு நிதி நிலைமையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.9 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம்.

2016-17ம் நிதி ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2017-18 நிதி ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

செலவுகளைக் குறைப்பதன் மூலம் நிதிப்பற்றாக்குறையை குறைக்கலாம் அல்லது வரி வருமானத்தை அதிகப்படுத்துவதன் மூலம் குறைக்கலாம். இதனால் நிதிப் பற்றாக்குறை குறித்த சந்தேகம் நிலவுகிறது. நாங்கள் நிதிப்பற் றாக்குறை இலக்கை எட்டுவோம்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் களின் சம்பளம் என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி ஆகும். ஆனால் ஊதிய குழுவின் பரிந்துரையை அமல் படுத்தும் பட்சத்தில் ஆரம்ப காலத்தில் முதல் இரு வருடங் களில் இந்த எல்லையை தாண்டு வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது வருடங்களில் ஜிடிபி மதிப்பு உயரும் பட்சத்தில் மீண்டும் 2.5 சதவீதம் என்ற வரம்புக்குள் சம்பளம் மற்றும் பென்ஷனை கொண்டு வர முடியும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டி யலிடப்பட்ட, பொதுத்துறையை சேர்ந்த 2,000 நிறுவனங்களில் பெண் இயக்குநரை நியமனம் செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

புதிய கம்பெனி சட்டத்தின் படி நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும் என்பது விதி ஆகும்.

கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மக்கள வையில் எழுத்து பூர்வமாக தெரிவித்த பதிலில் கூறியதாவது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் 1,707 நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை.

இதில் பொதுத்துறை நிறுவனங் களும் அடக்கம். அதேபோல பட்டியலிடப் படாத பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 329 நிறுவனங்களில் பெண் இயக் குநர்கள் இல்லை என்று தெரிவித் திருக்கிறார்கள்.

பெண் இயக்குநர்கள் இல்லாத நிறுவனங்களில் பெண் இயக் குநர்களை நியமிக்குமாறு பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணை யமான செபி, மத்திய அரசை கேட்டிருக்கிறது என்று ஜேட்லி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x