Last Updated : 31 May, 2016 10:14 AM

 

Published : 31 May 2016 10:14 AM
Last Updated : 31 May 2016 10:14 AM

150 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி ஆஸ்திரேலிய வங்கி மீது இந்திய தம்பதியர் வழக்கு

ஆஸ்திரேலியாவில் உள்ள ஏஎன் இஸட் வங்கி மீது 150 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி இந்திய கோடீஸ் வர தம்பதியர் வழக்கு தொடர்ந் துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகை நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்ததில்லை.

ஆஸ்திரேலியாவின் விக் டோரியா மாகாணத்தில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் இந்தியரான பங்கஜ் மற்றும் அவரது மனைவி நீரஜ் ஆஸ்வால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் செயல்பட்ட பரப் உர ஆலை 2010-ம் ஆண்டு கட்டாயமாக விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து வங்கிக் குழுமம்தான் (ஏஎன்இஸட்) காரணம் என இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவர்கள் வசம் இருந்த பங்குகளின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டதால் 150 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

2010-ம் ஆண்டு பரப் குழும நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. 2012-ம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த 65 சதவீத பங்குகளை குறைந்த மதிப்பில் விற்பனை செய்ய நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏஎன்இஸட் வங்கிக்கு திரும்ப செலுத்த வேண்டிய 90 கோடி டாலர் தொகைக்காக 250 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை விற்க நேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்வால் தரப்பு வழக்குரைஞர் டோனி பனோன் இதுகுறித்து கூறுகையில் வங்கி மற்றும் பங்குகளை வாங்கியவர்களுக்கு எதிராக தீர்ப்பு வரக்கூடும் என்றார்.

ஏஎன்இஸட் வங்கியில் 80 கோடி டாலரை ஆஸ்வால் கடனாகப் பெற் றிருந்தார். ஆனால் ஆலையின் பங்குகளைப் பெற்றவர்கள் 80 கோடி டாலருக்கும் கீழாக விற்றுள்ளனர். இது ஏஎன்இஸட் வங்கிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை விட குறைவானதாகும்.தங்களது பங்குகளை குறைத்து மதிப்பீடு செய்ததாக ஆஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்கள் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. குற்றம் சுமத்தப் பட்டவர்கள் மீதான விசாரணையும் சேர்த்து அதிகபட்சம் 6 மாதங்கள் வரை நடைபெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x