Published : 16 Sep 2016 11:44 AM
Last Updated : 16 Sep 2016 11:44 AM

வர்த்தக பற்றாக்குறை 38% சரிவு

ஆகஸ்ட் மாதம் வரையிலான வர்த்தகப் பற்றாக்குறை 38 சதவீதம் சரிந்து 767 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே கால கட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,240 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவாக இருந்ததன் காரண மாக வர்த்தகப் பற்றாக்குறை குறைந்தது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி 3,398 கோடி டாலராக இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14 சதவீதம் சரிந்து 2,919 கோடி டாலராக இருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி 8.47 சதவீதம் சரிந்திருக்கிறது.

மேலும், ஆகஸ்ட் மாத ஏற்று மதி 0.3 சதவீதம் சரிந்து 2,115 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2,158 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதி சரிந்திருக்கிறது.

சர்வதேச அளவில் தேவை குறைந்ததன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் இருந்து தொடர்ந்து 18 மாதங்களாக ஏற்றுமதி சரிந்தது. ஜூன் மாதம் ஏற்றுமதி உயர்ந்தாலும் ஜூலையில் ஏற்றுமதி சரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

தவிர முக்கியமான ஏற்றுமதி பிரிவுகளும் சரிவு ஏற்பட்டிருக் கிறது. பெட்ரோலியம் (14%), தோல் (7.82%) மற்றும் கெமிக்கல்ஸ் (5%) ஆகிய பிரிவுகளும் ஏற்றுமதி சரிந்திருக்கிறது.

தங்கம்

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் இறக்குமதி 77 சதவீதம் சரிந்து 111 கோடி டாலராக இருக்கிறது. வர்த்தக அமைச்சகத்தின் தகவல் படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 495 கோடி டாலராக இருந்தது. மேலும் வெள்ளி இறக்குமதியும் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 36.34 கோடி டாலராக இருந்த வெள்ளி இறக்குமதி இப்போது 13.03 கோடி டாலராக சரிந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x