Published : 14 Aug 2015 10:09 AM
Last Updated : 14 Aug 2015 10:09 AM

ரேகா மேனன் - இவரைத் தெரியுமா?

$ அசெஞ்சர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 21 லிருந்து இப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

$ தற்போது நிறுவனத்தின் மனிதவள துறை நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார்.

$ ஆசிய பசிபிக் நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ரஷியா, துருக்கி மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிறுவனத்தின் மனித வள ஆற்றலை மேம்படுத்தியவர்.

$ இதற்கு முன்பு தலிஸ்மா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். லீவிஸ் ஸ்டிராஸ், அக்ஸோ நோபிள் மற்றும் கார்கில் போன்ற நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் செயலாற்றியுள்ளார்.

$ ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த சேவைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொடக்கம் மற்றும் கார்ப்பரேட் செயல்பாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

$ ஜார்கண்ட்டிலுள்ள செயிண்ட் சேவியர் மேலாண்மை பள்ளியில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றவர்.

$ அசெஞ்சர் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

$ ஆட்டோமொபைல், தொழில் உபகரணங்கள், பயணம் மற்றும் போக்குவரத்து, ரசாயணம் மற்றும் நுகர்வு பொருட்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x