ரெனால்ட் லாட்ஜி அறிமுகம்

Published : 10 Apr 2015 10:33 IST
Updated : 10 Apr 2015 10:33 IST

எம்பிவி வாகன பிரிவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துவமாகத் திகழும் ரெனால்ட் நிறுவனம், புதிதாக ரெனால்ட் லாட்ஜி எனும் வாகனத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் விலை ரூ. 8.19 லட்சமாகும்.

புதிய செயல்திறனுடன், எரிபொருள் சிக்கனத்துடன், சொகுசான பயணம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் மிகச் சிறந்த செயலாற்றல் மிக்க செடான் பிரிவில் மிகச் சிறந்த சொகுசு வாகனமாக எம்பிவி பிரிவில் இது வெளிவந்துள்ளது. லாட்ஜியில் 7 வெவ்வேறு மாடல்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 8.19 லட்சம் முதல் ரூ. 11.79 லட்சம் வரையாகும்.

இந்தப் பிரிவில் இது நிச்சயம் புதிய சகாப்தம் படைக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சுமித் சஹானி அறிமுக விழாவில் கூறினார். நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளான டஸ்டரைப் போல இதுவும் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என நம்புவதாக அவர் கூறினார்.

இதில் 8 பேர் மிகவும் சௌகர் யமாக அமர்ந்து பயணிக்கலாம். இதன் சக்கரம் 2810 மி.மீ அகலம் கொண்டது. அத்துடன் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கன சிறப்பம்சங்கள் உள்ளன. இது எர்கோ டிரைவ் தொழில்நுட்பம் கொண்டது. அதிக செயல் திறனுக்கு டீசல் மற்றும் காரில் 1.5 லிட்டர் சிசிஐ என்ஜின் இருப்பதால் டீசல் கார் ஒரு லிட்டருக்கு 19.98 கி.மீ. தூரமும் பெட்ரோல் கார் லிட்டருக்கு 21.04 கி.மீ. தூரமும் ஓடக் கூடியது.

இதில் டிரைவர் உள்பட பயணி கள் அனைவருக்கும் ஏர்பேக் மற்றும் உயரத்தை சரி செய்யும் இருக்கை வசதி, சீட் பெல்ட் மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிவதற்கு நினைவூட்டும் கருவி, கதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் கருவி, வேகமாக பயணிக்கும்போது தானாக கதவுகளை பூட்டும் வசதி, அதேபோல விபத்து ஏற்படும் போது தானாக கதவுகளை திறக்கச் செய்யும் உணர் கருவி, பின் புற வைபர், பின்பக்கம் வாகனம் நிறுத்தும்போது அதை உணர்த்தும் கேமரா மற்றும் முன்பக்க பனிக்கால விளக்கு ஆகியன உள்ளன.

இரட்டை ஏசி வசதி உள்ளதால் காரில் உள்ள அனைவருக்கும் ஏசி பரவும். சவுகர்யமான மற்றும் முன்னோடி மாடலாக லாட்ஜி வந்துள்ளதால் இது அனைத்து பயன்பாட்டுக்கும் ஏற்றது.

இதில் மூன்று ஆண்டுகளாக அனைத்து சாலைகளைப் பற்றிய வரைபடம் இலவசமாக கிடைக்கிறது. வேகக் கட்டுப்பாடு மற்றும் மிக நுண்ணிய குரல் கட்டுப்படுத்தும் கருவி ஆகியன தாமாகவே ஆடியோ சிஸ்டத்தின் ஒசை அளவை குறைத்துவிடும். காரின் வேகத்துக்கேற்ப இது அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor