Published : 30 Dec 2016 10:46 AM
Last Updated : 30 Dec 2016 10:46 AM

ரகசிய ஆவணங்களை மிஸ்திரி திருப்பி தர வேண்டும்: டாடா சன்ஸ் நோட்டீஸ்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு டாடா சன்ஸ் நிறுவனம் புதிய நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. டாடா சன்ஸ் தலைவராக இருந்த போது அவர் வசம் இருந்த ரகசிய ஆவணங்களை பொதுவெளி யில் வெளியிட்டு வருகிறார். இயக்குநர் குழுவில் நடந்த பேச்சு வார்த்தைகள், நிதித்தகவல்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார். அனைத்து ஆவணங் களையும் 48 மணி நேரத்துக்குள் திருப்பி தரவேண்டும். அந்த தகவல்களை இனியும் பயன் படுத்தக் கூடாது என டாடா சன்ஸ் நிறுவனம் மிஸ்திரிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் டாடா சன்ஸ் அனுப்பும் இரண்டாவது நோட்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அனுப்பிய நோட்டீ ஸில், ‘டாடா குழுமத்தின் முக்கிய ஆவணங்கள் உங்கள் வசம் இருக்கிறது. முன் அனுமதி இல் லாமல் அவற்றை பொதுவெளி யில் வெளியிட்டு வருகிறீர்கள். தவறான வழியில் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்த தாக தகவல்கள் கிடைத்திருக் கிறது. இந்த நடவடிக்கை தண்டனைக்குரிய குற்றம்’ என குறிப்பிட்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு டாடா குழுமத்தின் நம்பகத்தன்மை விதிமுறைகளை மீறி இருப்பதாகவும், அதனால் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் டாடா சன்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பத்துக்கு இருக் கும் பங்குகள் காரணமாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். இயக்குநர் குழுவில் இருந்துகொண்டே குழுமத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருவது, நிறுவனத்தின் விதிமுறை களுக்கு எதிரானது என்று டாடா சன்ஸ் அந்த நோட்டீஸில் கூறியிருந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x