Last Updated : 14 Aug, 2015 10:04 AM

 

Published : 14 Aug 2015 10:04 AM
Last Updated : 14 Aug 2015 10:04 AM

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: பாதுகாப்பு அமைச்சகத்துடன் அமேசான் ஒப்பந்தம்

ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

அமேசான் ராணுவ திறன் ஒப்பந்தம் (ஏஎம்பிடி) மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வேலை திறன் மேம் பாட்டு பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்த மறு பணியமர்வு இயக்குநரகத்துடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களது திறனை மேம்படுத்தும் பயிற்சி அளித்து அவர்கள் புதிய பணி களுக்கு தகுதியுடையவர்களாக ஆக்குகிறது. ராணுவத்திலிருந்து அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் வெளியேறுவோருக்கு இத்த கைய பயிற்சியை அளிக்க அமே சான் முடிவு செய்துள்ளது.

இதற்கென தனி குழுவையும் அதாவது முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த குழு ``அமேசான் வாரியர்ஸ்’’ என்றழைக்கப்படும்.

ஏற்கெனவே உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பணி புரியும் நிறுவனங்கள் தொடர் பான பயிற்சிகளை அளிப்பதோடு புதிய வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை அளிப்பர். அத்துடன் அமேசானில் உள்ள வேலை வாய்ப்புக்கள் இவர்களுக்கு அளிக்கப்படும்.

நாட்டுக்காக சேவை புரிந்த ராணுவ வீரர்களின் பணி அவர்கள் ஓய்வு பெறுவதோடு நிறைவடைவதில்லை.

அவர்களது திறனை அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர் களுக்கு சேவையளிக்க பயன் படுத்திக் கொள்ள திட்டமிட் டுள்ளது என்று அமேசான் இந்தியா நிறுவனத்தின் மனித வளப் பிரிவின் இயக்குநர் ராஜ் ராகவன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் செயல்படும் அமேசான் நிறுவனம் அங்குள்ள முன்னாள் ராணுவ வீரர்களை கடந்த மூன்று ஆண்டுகளாக பணியில் அமர்த்தியுள்ளது. ஜி.ஐ. ஜாப்ஸ் மற்றும் வெடரன்ஸ் மேகஸினில் வெளி யாகும் வேலை வாய்ப்புகள் மூலம் 100 முன்னணி நிறுவனங்கள் முன்னாள் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x