Last Updated : 16 Sep, 2016 11:50 AM

 

Published : 16 Sep 2016 11:50 AM
Last Updated : 16 Sep 2016 11:50 AM

பணிபுரிய சிறந்த ஐடி நிறுவனங்கள் பட்டியலில் அடோப், கூகுள், மைக்ரோசாப்ட்

ஐடி மற்றும் ஐடிஇஎஸ் துறையில் பணிபுரிய சிறந்த 50 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத் தின் நடைமுறைகள் மற்றும் பணி யாளர்களின் மதிப்பீடுகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. `கிரேட் பிளேஸ் டு வொர்க் இன்ஸ்டியூட் இந்தியா’ இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள நிறு வனங்களில் 47 சதவீத நிறுவனங் கள் வெளிநாட்டு நிறுவனங்கள் (எம்என்சி) ஆகும். அடோப் இந்தியா, கூகுள் இந்தியா மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா ஆகியவை முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளன.

குளோபல் அனல்டிக்ஸ் இந் தியா, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜீஸ், ஹிட்டாச்சி டேட்டா சிஸ்டம்ஸ், நெட் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. தவிர எஸ்ஏபி இந்தியா, இன்டெல் இந் தியா, பேபால் உள்ளிட்ட பன் னாட்டு நிறுவனங்களும் உள்ளன.

சலுகைகள், வேலை-குடும்ப சமன்பாடு, லாபத்தை பிரித்து கொடுத்தல் ஆகிய பிரிவுகளில் இந்திய நிறுவனங்களை விட பன்னாட்டு நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.

ஐந்து வருடங்களுக்குள் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரியும் இடங் களில் கொண்டாட்டம், தவறுகளை பொறுத்துக்கொள்ளுதல், எளிதாக தலைமையை அணுகுதல் ஆகிய பிரிவில் முன்னிலையில் உள்ளன.

பணிபுரிய சிறந்த நிறுவனங் களில் 24 சதவீத நிறுவனங்கள் பெங்களூருவில் உள்ளன. சிஸ்கோ, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ், சேல்ஸ்போர்ஸ் மற்றும் இஎம்சி இந்தியா ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 145 நிறுவனங்களில் 36,500 நபர்களின் கருத்துகளை வைத்து முதல் 50 நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x