Published : 23 Jan 2014 10:43 AM
Last Updated : 23 Jan 2014 10:43 AM

பங்குச்சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

இன்று காலை, பங்குச்சந்தையிலும், அந்நியச் செலாவணி சந்தையிலும் வர்த்தகம் சரிவு நிலையில் தொடங்கியது.

பங்குச்சந்தையில், சென்செக்ஸ் 65.76 புள்ளிகள் குறைந்து 21,271.91 புள்ளிகளாகவும், நிப்டி 3.95 புள்ளிகள் குறைந்து 6,335.00 புள்ளிகளாகவும் இருந்தன.

எண்ணெய், எரிவாயு, வங்கித்துறை பங்குகளின் வர்த்தகம் துவக்க நேரத்திலேயே சரிவுடன் காணப்பட்டன.

ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்த வரை, ஹாங்காங் பங்குச்சந்தை சரிவுடன் இருந்தாலும், ஜப்பான் பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்றே ஏறுமுகத்தில் முடிந்திருந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் குறைந்து 61.98 என்ற நிலையில் இருந்தது.

எண்ணெய் இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வர்த்தக முடிவின் போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் வரை உயர்ந்து 61.81 என்ற நிலையில் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x