Published : 30 Jan 2017 05:55 PM
Last Updated : 30 Jan 2017 05:55 PM

நடப்புக் கணக்கிலிருந்து ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: ஆர்பிஐ அறிவிப்பு

ஏடிஎம்கள் மற்றும் நடப்புக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது. எனினும் சேமிப்புக் கணக்கிலிருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏடிஎம்கள் மற்றும் நடப்பு கணக்கிலிருந்து இருந்து பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு பற்றி மறு ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் முற்றிலும் (ரூ.10,000) விலக்கிக் கொள்ளப்படுகிறது.

மறுபரிசீலனை

எனினும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு இருந்ததுபோல இந்த வரம்பை வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ள லாம். அதேநேரம் வாரத்துக்கான உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக தொடர்கிறது. இந்த வரம்பை நீக்குவது குறித்து பின்னர் மறு ஆய்வு செய்யப்படும்.

இதுபோல, நடப்புக் கணக்கு, ரொக்கக் கடன் கணக்கு, ஓவர்டிராப்ட் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

மேலும் ரொக்கப் பயன்பாட்டை குறைக்கவும் டிஜிட்டல் வழி பணப்பரிமாற்றத்துக்கு மாறவும் வாடிக்கையாளர்களை வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி திடீரென அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, ஏடிஎம் மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பதற்கான தினசரி உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக் கெடு கடந்த டிசம்பர் 30-ம் தேதி

யுடன் முடிவடைந்தது. இதை யடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x