Published : 14 Aug 2015 09:52 AM
Last Updated : 14 Aug 2015 09:52 AM

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65க்கு கீழே சரிந்தது

நேற்றைய வர்த்தகத்திலும் ரூபாய் மதிப்பு சரிந்தது. ஒரு டாலர் 65 ரூபாய் என்ற முக்கியமான விலைக்கு கீழே ரூபாய் சரிந்தது. 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு இந்த விலைக்கு ரூபாய் சரிவது இப்போதுதான். வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 65.23 ரூபாய் வரை சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 65.10 ரூபாயில் முடிவடைந்தது.

டாலருக்கான தேவை அதிகரித்திருப்பதும், ரூபாய் க்கான தேவை குறைவதாலும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள், டெலிகாம் நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து டாலரை வாங்கிக் கொண்டிருக்கின்றன.

சீனா தன்னுடைய நாணயத்தின் மதிப்பை குறைத்ததால் ரூபாய் மதிப்பு மட்டு மல்லாமல் ஆசியாவின் முக்கி யமான கரன்ஸிகளின் மதிப்பு சரிந்துள்ளது. இந்த நிலையில் ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையும் என்று சிட்டி குழுமம் கருத்து தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் சீன கரன்ஸி சரிவால் பெரிய சரிவு ஏற்படாது என்றும் சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.

ஒரு டாலர் ரூ.64.50 முதல் ரூ.65.50 என்ற நிலையில் வர்த்தகமாகும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பங்குச் சந்தை ஏற்றம்

நான்கு நாள் தொடர் சரிவுக்கு பிறகு பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. பணவீக்கம் குறைந்திருந்த நிலையில் அதிக ஏற்றத்தில் பங்குச் சந்தை தொடங் கின. ஆனால் இந்த நிலைமை மாலை வரை நீடிக்கவில்லை. வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 8355 புள்ளியில் சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயர்ந்து 27549 புள்ளியிலும் முடிவடைந்தன.

ஹெல்த்கேர் குறியீடு அதிகமாக உயர்ந்து முடிந்தது. அதனை தொடர்ந்து வங்கி, ஆட்டோ, பொதுத்துறை குறியீடு ஆகியவை உயர்ந்து முடிந்தன. மெட்டல் குறியீடு 2.75 சதவீதம் சரிந்தது. ரியால்டி 1.44 சதவீதமும், கன்ஸ்யூமர் டியூரபிள் 0.97 சதவீதமும் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பங்குகளில்

எம் அண்ட் எம், சிப்லா, லுபின், மாருதி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் உயர்ந்து முடிந்தன. வேதாந்தா (-9.26%), டாடா ஸ்டீல் (-6.22%), ஹிண்டால்கோ (-5.21%) பங்குகள் சரிந்து முடிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x