Published : 01 Aug 2015 10:20 AM
Last Updated : 01 Aug 2015 10:20 AM

சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்வு

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்து 28114 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 8532 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 8500 புள்ளிகளுக்கு மேலே முடிவடைவது இதுதான் முதல் முறை ஆகும்.மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சுமார் ஒரு சதவீத அளவுக்கு உயர்ந்தன.

பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசின் உதவி, முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்திருப்பது ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை உயர்ந்தது. குறிப்பாக பொதுத்துறை பங்குகளில் வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. அதனால் வங்கி குறியீடு நன்றாக உயர்ந்து முடிந்தது.

மின்சாரம் மற்றும் ஆயில் அண்ட் கேஸ் குறியீட்டை தவிர மற்ற அனைத்து துறை குறியீடு களும் உயர்ந்து முடிந்தன. ரியால்டி குறியீடு 2.89%, ஹெல்த் கேர் குறியீடு 1.99%, ஆட்டோ 1.8%, எப்.எம்.சிஜி குறியீடு 1.78 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.

வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி கடன் மற்றும் நிதிக்கொள்கையை அறிவிக்க இருக்கிறது. இதனை பொறுத்து சந்தையின் அடுத்தகட்ட நிகழ்வுகள் இருக்கும் என்று பங்குசந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x