Last Updated : 06 Oct, 2016 10:46 AM

 

Published : 06 Oct 2016 10:46 AM
Last Updated : 06 Oct 2016 10:46 AM

செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டின் முதலாவது மருத்துவ பூங்காவை (Medical Park) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்துவ பூங்கா சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைய உள்ளது. அதி உயர் மருத்துவ கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமான இது அமைகிறது.

இந்த மருத்துவ கருவிகள் தயாரிப்பு பூங்காவை பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைப் கேர் நிறுவனம் 300 ஏக்கர் நிலத் தில் அமைக்க உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற் கான அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. மருத்துவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவன மான ஹெச்எல்எல் 330.10 ஏக்கர் குத்தகை நிலத்தில் இதை அமைக் கிறது. இதற்கான முதலீட்டில் 50 சதவீதத்தை ஹெச்எல்எல் நிறு வனமே மேற்கொள்கிறது. இதில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தொழில் தொடங்க லாம் என மத்திய அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது...

மருத்துவ தொழில்நுட்பத் துறையில் முதல் முதலில் அமைக்கப்படும் உற்பத்தி பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உள்நாட்டிலேயே அதி உயர்வான கருவிகள் தயாரிக்கப்படும். இதனால் மருத்துவ கருவிகள் விலை குறையவும், மருத்துவ சேவைகள் எளிதாக அனைவருக்கும் சென்று சேரும். குறிப்பாக நோய் கண்டறிதல் துறை சார்ந்த சேவைகள் மிகப் பெருவாரியான மக்களுக்கு சேரும் வாய்ப்புகள் உருவாகும்.

இந்த மருத்துவ பூங்கா, நாட்டின் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கருவிகள் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்தும் விதமாகவும் அமையும், மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பூங்கா ஒவ்வொரு கட்ட மாக செயல்பாட்டுக்கு வரும், முதற் கட்ட பணிகள் 7 ஆண்டுகளில் முடி வடையும். மூன்றாண்டுகளுக்கு பிறகு கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்படும். ஹெச்எல்எல் நிறு வனம் நிலங்களை உள் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர் களுக்கு அளிக்கும். மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங் களுக்கு வெளிப்படையான ஏலகேட்பு முறையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதற்கட்டமாக மருத்துவக் கருவிகள் தயாரிப்பில் தகுதி வாய்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம் வழங்கப்படும். அதற்கடுத்து தேவை அதிகரிப்பை பொறுத்து நிலத்துக்கான விலை முடிவு செய்யப்படும். மருத்துவ சேவை துறையின் வளர்ச்சிக்கு இந்த பூங்கா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x