Published : 29 Nov 2014 10:40 AM
Last Updated : 29 Nov 2014 10:40 AM

கிரண் ரங்கா - இவரைத் தெரியுமா?

$ ரிப்பிள் பிராக்ரன்ஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். வாசனைப் பொருள் தயாரிப்பில் மிகவும் பிரபலமாகத் திகழும் இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு மைசூரில் உருவாக்கப்பட்டது.

$ வாசனை என்பதே சுழற்சி என்ற அடிப்படையில் தங்களது தயாரிப்பு அகர்பத்திகளுக்கு சைக்கிள் பிராண்ட் என பெயரிட்டவர் இவரது தாத்தா என். ரங்காராவ்.

$ இன்று என்.ஆர். குழும நிறுவனமாக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

$ சைக்கிள் பியூர் அகர்பத்தி, ரிப்பிள் பிராக்ரன்ஸஸ் ஆகியவ நிறுவனங்களை மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இவர் நிர்வகிக்கிறார்.

$ இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலையில் வாசனைப் பொருள் வர்த்தகத்தில் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவின் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலையில் முதுகலை நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

$ பிரான்சில் உள்ள கேன்ஸில் நடைபெற்ற உலக வாசனை திரவிய மாநாட்டில் பங்கேற்றுள்ளார். எப்ஏஎப்ஏ-வின் உறுப்பினராகவும் உள்ளார்.

$ நமது உணர்வுகளில் 75 சதவீதம் நாம் நுகரும் வாசனையைப் பொறுத்தே அமைகிறது என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. சமீபத்தில் ஐரிஸ் என்ற புதிய பிராண்டை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x