Published : 05 Oct 2013 03:31 PM
Last Updated : 05 Oct 2013 03:31 PM

ஒய்.வி. ரெட்டி - இவரைத் தெரியுமா?

#ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர். ஐ.ஏ.எஸ் அதிகாரி, சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) செயல் இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

#சென்னை பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைபட்டமும், ஒஸ்மானியா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

#ஒய்.வி. ரெட்டி போன்ற ஒருவர் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவராக இருந்திருந்தால் அமெரிக்கா பொருளாதாரம் இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி இருக்காது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் ஜோசப் இ. ஸ்டிகிலிட்ஸ் (Joseph E. Stiglitz) சொல்லி இருக்கிறார்.

#இந்தியா அண்ட் குளோபல் ஃபைனான்ஸியல் கிரைஸிஸ் உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

#இப்போது இந்தியாவின் 14-வது நிதி கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x