Published : 06 Oct 2016 10:44 AM
Last Updated : 06 Oct 2016 10:44 AM

‘என்ரிச் டி’ பாலை அறிமுகம் செய்தது கிரீம்லைன் டெய்ரி

தென்னிந்தியாவில் செயல்பட்டு வரும் கிரீம்லைன் டெய்ரி நிறுவனம் ஜெர்சி என்னும் பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்துவருகிறது. இந்த நிலையில் புதிய வகை `என்ரிச் டி’ என்னும் பால் வகையினை அறிமுகம் செய்தது. ஒரு வருடத்துக்கு முன்பாக ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தி, அங்கு விற்பனை செய்துவரும் நிலையில் இப்போது சென்னையில் இந்த புதிய பால் வகையினை அறிமுகம் செய்திருக்கிறது.

தற்போதைய வாழ்க்கை சூழலில் விட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் என்ரிச் டி பால் இந்த குறைபாட்டினை போக்குவதற்கு உதவும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பி.கோபாலகிருஷ்ணன் கூறினார். ஒரு நாளைக்கு 7.1 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் கொண்டது இந்த நிறுவனம். தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இந்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த நிதி ஆண்டு முடிவில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.1,000 கோடி அளவில் இருந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம் கிரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x