Last Updated : 28 Jun, 2016 09:39 AM

 

Published : 28 Jun 2016 09:39 AM
Last Updated : 28 Jun 2016 09:39 AM

என்எஸ்இ ஐபிஓ: ஜனவரியில் விண்ணப்பிக்க முடிவு

இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) பொதுப்பங்கு வெளியிட 2017 ஜனவரி மாதம் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. என்எஸ்இ பொதுப்பங்கு மற்றும் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளி யீட்டுக்கான ஆவணங்களை ஜனவரி 2017ல் `செபி’-யிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜூன் 23 அன்று நடைபெற்ற என்எஸ்இ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மற்றும் பங்கு மதிப்பு போன்றவற்றின் முதல் கட்ட அறிக்கை மற்றும் விவர அறிக்கை ஜனவரி 2017ல் வெளியிட விருப்பம் தெரிவித்துள் ளது. மேலும் பங்குகளை 2017 ஏப்ரல் மாதம் பட்டியலிடவும் இயக்குநர்கள் குழு நிர்வாகத் துக்கு ஆலோசனை வழங்கி யுள்ளது.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் விதிமுறைகள்படி, பொதுப்பங்கு வெளியிட முயற்சி செய்யும் நிறுவனம் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் இந்த முதற்கட்ட அறிக்கை மற்றும் விவரக் குறிப்பை அளிக்க வேண்டும். இந்த அறிக்கையில் நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள், நிர்வாக அமைப்பு, எந்தெந்த தொழில் பிரிவுகளில் இயங்குகிறது, நிறுவனத்துக்கு உள்ள ரிஸ்க் நிலவரங்கள் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் இந்த பொதுப்பங்கு வெளியீட்டில் எந்த வகையான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது என்பது முடிவு செய்யப்படும்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், என்எஸ்இ பங்குகளை பட்டிய லிடுவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இயக்குநர் குழு தற்போதைய பட்டியலிடும் குழுவை மாற்றி யமைத்துள்ளது. மேலும் துணைக் கமிட்டியும் இயக்குநர் குழுவால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இதற்கான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பட்டியலிடும் நடைமுறை களுக்கு முன்னர் செபி சுட்டிக் காட்டும் மறு கட்டமைப்பு பணி களும் மேற்கொள்ளப்படும் என்று என்எஸ்இ குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x