Published : 23 May 2015 10:14 AM
Last Updated : 23 May 2015 10:14 AM

உள்பேர வணிக குற்றச்சாட்டு: முருகப்பா குழுமத் தலைவர் ஏ. வெள்ளையன் விலகல்







உள்பேர வணிகத்தில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து முருகப்பா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஏ. வெள்ளையன் விலகியுள்ளார். தவிர கொரமண்டல் இண்டர்நேஷ னல், ஈஐடி பாரி இந்தியா ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலிருந்தும் விலகியுள்ளார்.

இந்தப் பிரச்சினை முழுமை யாகத் தீர்க்கப்படும்வரை இயக் குநர் குழுவின் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதாக முருகப்பா குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செபி-யின் இணையதளத்தில் வியாழக் கிழமை வெள்ளையன் மற்றும் மூன்று பேர் உள்பேர வணிகத் தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டது. சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் முருகப்பா குழும நிறுவனங்களில் ஒன்றுதான் கொரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனமாகும். இந்நிறுவனம் 2011-ம் ஆண்டு சபேரோ ஆர்கானிக்ஸ் குஜராத் லிமிடெட் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

இது தொடர்பான விஷயத்தை முன்கூட்டியே மூன்று பேரிடம் வெள்ளையன் பகிர்ந்து கொண் டுள்ளார். இந்த தகவலின் அடிப் படையில் அம்மூவரும் பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட்டு ஆதா யமடைந்ததாக செபி குற்றம் சாட்டியுள்ளது. இத்தகைய முறையற்ற வர்த்தகத்தால் பெறப் பட்ட ஆதாய தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 1.92 கோடியை இந்த நால்வரும் நிறுவனமும் செலுத்த வேண்டும் என்று செபி குறிப்பிட்டுள்ளது.

கோபாலகிருஷ்ணன், சி.வி. கருப்பையா மற்றும் ஏஆர் முருகப்பன் ஆகியோரும் இந்த உள்பேர வணிகத்தில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.

இவர்களில் ஏஆர் முருகப்ப னின் மருமகன்தான் சி.வி. கருப் பையா. முருகப்பனின் தாயாரின் சகோதரர்தான் வெள்ளையனின் தாத்தா.

இது தொடர்பாக எழுந்த புகா ரின் அடிப்படையில் 2011 மே 15-ம் தேதி முதல் ஜூன் 15, 2011 வரை யான காலத்தில் நடந்த பரிவர்த் தனைகளை செபி ஆய்வு செய் தது. 2011-ம் ஆண்டு மே 13- ம் தேதி சபெரோ பங்குகள் ரூ. 57.80-லிருந்து ரூ. 126.45 என்ற அளவுக்கு ஜூன் 15, 2011-ல் உயர்ந்தது.

கோபாலகிருஷ்ணன் 3.19 லட்சம் பங்குகளை ரூ. 2.72 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த கால கட்டத்தில் வேறு எந்த பங்கு வர்த்தகத்திலும் கோபாலகிருஷ் ணன் ஈடுபடவில்லை என்பதையும் செபி குறிப்பிட்டுள்ளது.

முருகப்பனின் மகன் சுப்ரமணி யத்திடமிருந்து ஒரு கோடி ரூபாயை கோபாலகிருஷ்ணன் பெற்றுள்ளார். இந்தப் பணம் முழுக்க முழுக்க பங்குகளை வாங்க (மே 28, 2011) பயன்படுத்தப் பட்டுள்ளதாக செபி குற்றம் சாட்டி யுள்ளது. அதே நாளில் முருகப்ப னிடமிருந்து சுப்ரமணியம் ஒரு கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x