Published : 31 May 2016 10:21 AM
Last Updated : 31 May 2016 10:21 AM

இவரைத் தெரியுமா?- மைக்கேல் லாண்டெல்

சொடக்ஸோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். மற்றும் நிறுவனத்தின் இயக்குநர் குழு செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். 2005-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

சாஸ் மன்ஹாட்டன் வங்கியில் நிதி ஆலோசகராக பணியைத் தொடங்கினார். அதற்கு பிறகு போலியட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

சொடக்ஸோ நிறுவனத்தில் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான செயல்பாட்டு மேலாளராக பணிக்குச் சேர்ந்தவர், பின்னர் அமெரிக்க செயல்பாடுகளுக்காக மாறினார். பிறகு துணைத் தலைவர், குழும செயல்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தார்.

ஹார்வேர்ட் பிசினஸ் ரெவ்யூ 2015ல் பட்டியலிட்ட உலக அளவில் சிறந்த 100 சிஇஓ-க்களில் 67வது இடத்தில் உள்ளார். ஆசியன் எண்டர்பிரைசஸ் பத்திரிகை வழங்கிய சிறந்த தலைமைச் செயல் அதிகாரி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

பாரீஸில் உள்ள ஐரோப்பிய வர்த்தக கல்வி மையத்தில் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x