Published : 08 Nov 2016 10:36 AM
Last Updated : 08 Nov 2016 10:36 AM

இவரைத் தெரியுமா?- டாம் வான் பான்ஸ்டார்ப்

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். வங்கதேசம், இலங்கை நாடுகளின் செயல்பாடுகளுக் கான இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

வால்வோ கார் குழுமத்தின் ஆசிய அளவிலான மார்க்கெட் டிங் இயக்குநராகவும், பின் லாந்து செயல்பாடுகளுக்கான இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

வால்வோ வட அமெரிக்க பிரிவில் திட்ட தலைமை, கட்டுப்பாட்டாளர், புதிய கார் அறிமுக தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் 17 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பின்லாந்தின் வார்ட்சிலா நிறுவனத்தில் மேம்பாட்டு பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

விற்பனை செயல்பாடுகள், குறுக்கீடு ஆய்வுகள், ஆட்டோமொபைல், பொருள் மேம்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வல்லுனர்.

ஹெல்சிங்கி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எனர்ஜி இன்ஜினீயரிங் பிரிவில் எம்எஸ்சி பட்டமும், வாசா பல்கலைக் கழகத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x