Published : 23 May 2015 10:16 AM
Last Updated : 23 May 2015 10:16 AM

இவரைத் தெரியுமா?- சுமித் சஹானி

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2014 பிப்ரவரியிலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

2012 லிருந்து நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

விற்பனை, சந்தை மற்றும் விற்பனைக்கு பிறகான சேவை, விநியோக மேம்பாடு போன்ற துறைகளில் வல்லுனர்.

இதற்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தில் விற்பனை, மற்றும் விற்பனைக்கு பிறகான சேவை துறையின் துணை தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பல்வேறு தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பியட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.

மூன்று ஆண்டுகளுக்குள் இந்திய டாப் 10 ஆட்டோமோட்டிவ் பிராண்டுக்குள் ரெனால்ட் நிறுவனத்தைக் கொண்டுவந்தார்.

இந்தூர் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x