Published : 18 Jan 2017 10:53 AM
Last Updated : 18 Jan 2017 10:53 AM

இவரைத் தெரியுமா?- ஓய் வி எஸ் விஜய்குமார்

மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.

ஆட்டோமொபைல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தில் செயல் துணைத் தலைவர் பொறுப்பு வகித்துள்ளார்.

டெல்பி ஆட்டோமோட்டிவ் நிறுவனத் தின் நொய்டா ஆலை துணைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கேப்ரியேல் இந்தியா, பிஹர் இந்தியா, மாருதி உத்யோக், ஹைதராபாத் ஆல்வின் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

விஜயவாடா லயோலா கல்லூரியில் பிஎஸ்சி பட்டமும், ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பிடெக் பட்டமும் பெற்றவர். ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஹார்வேர்டு பிசினஸ் பள்ளியில் மேலாண்மையில் உயர்கல்வி முடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x