Published : 01 Aug 2015 10:23 AM
Last Updated : 01 Aug 2015 10:23 AM

இவரைத் தெரியுமா?- அபிஜித் ராய்

பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதி காரி. 2012 ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பை வகிக்கிறார்.

பெர்ஜர் பெயிண்ட்ஸின் வங்கதேச செயல்பாடுகளுக்கான தலைவர் மற்றும் பொறுப்புகளற்ற இயக்குந ராகவும் பணியாற்றி வருகிறார்.

பிப்ரவரி 2011 முதல் ஜூலை 2012 வரை இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பெயிண்ட் துறையில் 19 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆசியன் பெயிண்ட்ஸ் மற்றும் லோரியல் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.

நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தொடர்பு குழு உறுப்பினர், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் மற்றும் நிறுவனத்தின் சமூக செயல்பாடுகளுக்கான குழு உறுப்பினர் என பல பொறுப்புகளையும் வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x