Last Updated : 27 May, 2016 03:23 PM

 

Published : 27 May 2016 03:23 PM
Last Updated : 27 May 2016 03:23 PM

ஹிரோஷிமா நினைவிடத்திற்குச் சென்ற முதல் அமெரிக்க அதிபாரானார் ஒபாமா

"ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட சம்பவம் நவீன வரலாற்றின் மாற்றுப்புள்ளி அந்த நிகழ்வை நாம் ஏதோ ஒரு விதத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.”

ஜப்பானின் ஷிமா நகரில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து ஹிரோஷிமா சென்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஹிரோஷிமா நினைவிடத்துக்கு இதற்கு முன்னர் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் சென்றதில்லை ஒபாமாவே அங்கு சென்றுள்ள முதல் அமெரிக்க அதிபராவார்.

அணுகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் நீங்காத காயங்களுடன் இருக்கும் ஜப்பானிய மக்களின் வேதனையை எந்தவிதத்திலும் அதிகப்படுத்திவிடக் கூடாது என்ற உணர்வுப்பூர்வமான நெருக்கடியிலேயே ஒபாமா அங்கு சென்றிருக்கிறார். 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 1,40,000 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறிய உரையை நிகழ்த்த விரும்பினார். ஆனால், ஹிரோஷிமா தாக்குதலுக்கு மன்னிப்பு கோரக்கூடாது என வெள்ளை மாளிகை வட்டாரத்தில் அழுத்தம் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஹிரோஷிமா தாக்குதல் அப்பாவி பொதுமக்களை கொன்ற குவித்த செயல் என பரவலாகப் பார்க்கப்பட்டாலும், இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த நிகழ்வாகவே அமெரிக்கர்கள் இன்னும் அச்சம்பவத்தைப் பார்க்கின்றனர் என்பதே அதன் காரணம்.

அதற்கேற்ப ஒபாமாவின் ஹிரோஷிமா பயணம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், "போரினால் பறிபோன உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், சர்வதேச அமைத்திக்கு என்ன செய்யலாம் என்ற யோசனையும் அடங்கியதாக அதிபர் ஒபாமாவின் செய்தி இருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுடன் ஹிரோஷிமா நினைவிடத்துக்குச் சென்ற ஒபாமா அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னார் பேசிய அவர், "இந்த நினைவிடம் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியை நாம் முடிக்கவில்லை, அமைதியை நிலைநாட்டும் பணியை நாம் இன்னும் நிறைவு செய்யவில்லை, இனி எதிர்காலத்தில் அணு ஆயுதப் போரே இல்லை என்ற நிலையையும் இன்னும் நாம் எட்டவில்லை என்பதையே நினைவுபடுத்துகிறது.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட சம்பவம் நவீன வரலாற்றின் மாறறுப் புள்ளி. அந்த நிகழ்வை நாம் ஏதோ ஒரு விதத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது" என்றார்.

ஹிரோஷிமாவில் தாக்குதலில் தப்பிப் பிழிஅத்த கின்யூ இகேகமி கூறும்போது, "அந்த நாள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னைவிட்டு நீங்கவில்லை. பள்ளிக் குழந்தைகள் உதவி, உதவி எனக் கதறிய சத்தம் இன்னமும் என் நெஞ்சத்தை பதற வைக்கிறது. ஹிரோஷிமா அணுகுண்டு கதிர்வீச்சு தாக்கம் தலைமுறைகள் தாண்டி இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எங்களது வேதனைகளை ஒபாமா உணர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

இது ஒருபுறம் இருக்க அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுக்கு ஜப்பானியர்களின் வாக்கு வங்கி கணிசமான பங்கு வகிப்பதால், ஒபாமா ஹிரோஷிமா சென்றுள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x